சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 11:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருவேற்காட்டில், ரேஷன் கடை உள்ளது. இதன் அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு அந்த வழியாகத்தான் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்