திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குரிசிலாப்பட்டு கிராமத்தில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வமணி, குரிசிலாப்பட்டு.