தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி அருகே மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக உள்ளது. இதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.