கடலூர் பாடலீசுவரர் கோவில் சன்னதி தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை சுத்தம் செய்யும் மாநாகராட்சி தொழிலாளர்கள், குப்பை கழிவுகளை முறையாக அகற்றாமல் கால்வாய் ஒட்டிய பகுதியிலேயே குவித்து வைத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் இந்த கழிவுகள் மீண்டும் கால்வாயின் உள்ளே விழுந்து, தண்ணீர் ஓடுவதற்கு தடையை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை அகற்றும் போது, முழுமையாக அகற்றுவதடன், கழிவுகளையும் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.