கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2026-08-02 10:08 GMT

வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சாக்கடை கழிவுநீர் ஆறு போல வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்