பாதியில் நிற்கும் சாக்கடை அமைக்கும் பணி

Update: 2026-08-02 14:58 GMT

பரமத்திவேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் பிரதான சாலையில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தனிப்பட்ட நபர்கள் கடைகளில் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்காததால் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர்‌ தேங்கி அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்