கரூர் மாவட்டம் 80 அடி சாலை பழனியப்பன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 3 மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.