அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏராளமான செடிகள் முளைத்து கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.