விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் 6-வது வார்டு அண்ணாமலை நகரில் பிரதான சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு கழிவுநீரானது வெளியேறி சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. இதனால் கடும்துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடியை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.