சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2026-06-21 14:12 GMT

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் சென்றாய பெருமாள் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயில் இருந்து வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் இங்கு சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்