சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2026-06-21 16:52 GMT

மதுரை கோ.புதூர் செந்தில்குமரன் தெருவில் சில நாட்களாக கழிவுநீர் சாலையில் அதிகளவில் செல்கிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் எழும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படுத்தும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் அகற்றவும் மேலும் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்