தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தர்மபுரி மெயின் ரோட்டில் தேசிய மயமாமக்கப்பட்ட வங்கி முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் அப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.