தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-21 18:36 GMT

 மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் முத்துகவுண்டம்பாளையம் ஊராட்சி சின்னியம்பாளையம் அருகே உள்ள என்.பி.எஸ். நகர் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி என எந்த வசதிகளும் கடந்த பல ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். என்.பி.எஸ்.நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்