திண்டுக்கல்லை அடுத்த சுக்காம்பட்டி, கம்பளியம்பட்டி ஊராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆறாக ஓடுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை அதிகாரிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும்.