கோவை சவுரிபாளையம் இந்திரா நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.