சேலம் மாவட்டம் பி.நாட்டாமங்கலம் அமானி கொண்டலாம்பட்டி 9-வது வார்டு ஆதி திராவிடர் தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும்.