தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2026-08-16 13:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி வள்ளலார் பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இந்த சாலையின் அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி