திண்டுக்கல் ராஜலட்சுமிநகர் பி.ஏ.கே. காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. அதோடு கொசுப்புழுக்களும் அதிக அளவில் உருவாவதால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.