சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிக்குட்பட்ட சில கிராமப்புறங்களில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது. இதன் மூலம் எழும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்குவதை தடுக்கவும், அவ்வப்போது சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.