சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. மேலும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீரில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.