அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2026-06-28 17:42 GMT

சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பி.டி.ஆர். நகர் பகுதியில் ஏறத்தாழ 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளபொதுமக்கள் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்