ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலையில் முல்லை நகர் ரூடிஸ் காலனி அருகே உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரம் தேங்கி நிற்கிறது. மேலும் அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய முன்வருவார்களா?