மதுரை நரிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் அவ்வழியே கடந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?