கோவை காந்திமாநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இனிமேலாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.