அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை திருப்பத்தில் ஸ்டேட் பாங்க் பகுதியிலும், பிரதான காந்திரோடு மசூதி அருகிலும் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பஜார், ரெயில் நிலையம் செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் கால்வாயில் தவறி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அந்தக் கால்வாய் பகுதியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், அரக்கோணம்.