கால்வாய் வசதி அமைத்துத்தருவார்களா?

Update: 2026-07-05 19:46 GMT

வேலூர் அருகே சதுப்பேரி ஏரிக்கோடி பகுதியில் படகு குழாம் அருகே தேவி நகர் உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அருகில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு குடிநீர் பிடிக்கும்போது வெளியேறும் தண்ணீர் வடிந்து செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் தண்ணீர் தேங்குகிறது. எனவே தேவிநகர் தெருவில் கால்வாய் வசதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சீரமைப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரம், வேலூர்.

மேலும் செய்திகள்