தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2026-07-12 10:04 GMT

பொள்ளாச்சி நந்தனார் காலனி தூய்மை பணியாளர் குடியிருப்பு பின்புறம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்