மருங்கூரில் பிரதான சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோடாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-சுபாஷ் தாணப்பன், மருங்கூர்.