சுகாதார சீர்கேடு

Update: 2026-07-12 12:17 GMT

கோவை சித்தாபுதூரில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் சங்கனூர் ஓடையை தாண்டி உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்