பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா காலனி பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் கசிவு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஓடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.