திருப்பூர் சிட்கோ ரோடு அண்ணாநகர் செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்து நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடைக்குள் தவறி விழும் நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் படுகாயம் அடையும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் அந்த சாக்கடைக்குள் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பேராபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மூடப்படாமல் இருக்கும் சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசுதேவன், திருப்பூர்.