விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் அடிக்கடி பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பு காரணமாக அங்குள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.