கோவை மாநகராட்சி 75-வது வார்டுக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் சுகர்கேன் மெயின் ரோடு நேருஜி வீதி கிழக்கு பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.