வேலூரை அடுத்த பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது. பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வடிந்து செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. வாரச்சந்தை வளாகத்தில் சிமெண்டு தளம், கால்வாய் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், பொய்கை.