வேலூர் தோட்டப்பாளையத்தில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு சோளாபுரி அம்மன் கோவில் முதல் தெரு சாலையோரம் கால்வாய் கட்டாமல் தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலையோரம் சாலை பெயர்ந்து சேதம் அடைய தொடங்கி உள்ளது. சாலை நடுப்பகுதியும் சில இடங்களில் சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. பழைய சாலை அகற்றப்படாமல் புதிய தார் சாலை அமைக்கப்பட்டதால், இருபுறமும் உள்ள வீடுகள் சாலை மட்டத்தை விட பள்ளமாக உள்ளன. எனவே சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, தோட்டப்பாளையம்.