வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பள்ளி அருகில் பாலாற்றுக்கு செல்லும் வழியில், தெருவில் குறுக்காகச் செல்லும் சிறு கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தற்காலிகமாக பொதுமக்கள் கட்டைகளை வைத்து அடைத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். ஓட்டையை அடைத்து கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராமச்சந்திரன், வேலூர்.