பள்ளியாடி சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளியாடி ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஓடை அமைக்காததால் கழிவுநீர் சாலையில் பாய்ந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரா சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் பாய்ந்தோடும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமுவேல், குளச்சல்.