கடலூர் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகர் வளையாபதி தெருவில் உள்ள வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.