கொழுமத்தில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது மேட்டுத்தெரு. இந்த பகுதியில், கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் பல மாதங்களாக கழிவுநீர் நிரம்பி குப்பைகள் அடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் பெருகி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட காலமாக தூர்வாரப்படாத கால்வாய்களில் செடிகள் முளைத்து, பூச்சி, பாம்பு தொல்லைகளும் அதிகரித்துள்ளது. மேலும், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாய்களை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
-குமார், குமரலிங்கம்.