திருப்பத்தூரில் புதுப்பேட்டை சாலை பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக ஓடாமல் தேங்குகிறது. தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திவாகர், திருப்பத்தூர்.