வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகானந்தம், சமூக ஆர்வலர், பாதிரி.