சாலையில் ஓடும் சாக்கடை நீர்

Update: 2026-02-08 17:03 GMT

ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலைகளில் ஆறு போல சாக்கடை நீர் ஓடுகிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் ஊர் முழுவதுமாகவே துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்