கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 29-வது வார்டு முருகாலயா நகரில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.