வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை அருகில் ஓல்டு டவுன் செல்லும் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இந்தச் சாலை, ஓல்டு டவுன், எம்.ஜி.ஆர். நகர், சார்பனா மேடு, தென்ன மரத்தெரு போன்ற இடங்களை இணைக்கும் முக்கிய வழியாக உள்ளது. இங்குள்ள கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது தூய்மை பணியாளர்கள், கால்வாயில் தூர்வாரும் கழிவுகளை அகற்றாமல், சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்து விடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
-மோகன்தாஸ், வேலூர்.