கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2025-04-13 19:57 GMT

அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட சுவால்பேட்டை பஸ் நிறுத்த பகுதியில் திருத்தணி சாலையோரம் அடுத்தடுத்து கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்கள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமலும், அகலப்படுத்தப்படாமலும் உள்ளன. இதனால், நாளுக்கு நாள் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்