தேங்கும் கழிவுநீர்

Update: 2026-02-08 14:25 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள்ளி கிராமத்தில் 7,8 வார்டு பகுதியில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் பொதுகழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் பல மாதமாகவே அதே பகுதியில் குட்டை போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்துகொண்டே செல்கின்றனர். அப்பகுதியில் துர்நாற்றமும், நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எப்போதுதான் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ?

மேலும் செய்திகள்