வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவீன், பஜார் வீதி வந்தவாசி.