கால்வாய்க்கு மூடி போட வேண்டும்

Update: 2023-09-10 17:12 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மேற்கொண்டபோது, கால்வாயின் மேல் மூடி அகற்றப்படடது. கால்வாய் கட்டும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய் மீது மேல் மூடியை வைக்காமல் உள்ளனர். அந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தவறி கால்வாயில் விழும் அவலம் உள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய் மேலே மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெகன்நாதன், கடலாடி. 

மேலும் செய்திகள்