வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் 3-வது தெருவில் உள்ள கால்வாயில் இருந்து கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லையும், துர்நாற்றமும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.