அரக்கோணம் மாதவநகர் பகுதி, கோல்டன் பாலாஜி நகர் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் தார் சாலை முழுவதும் சேதம் ஏற்படுகிறது. திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சித்குமார், அரக்கோணம்.